இலங்கைக்குள் இன்னொரு யுத்தமா? பலப்படுத்தப்படும் இராணுவம்!!

army war parliament sanakkiyan again
By Vanan Jul 08, 2021 11:52 PM GMT
Report

இலங்கையில் சகல துறைகளும் இராணுவ மயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதைப்போல நாட்டின் உயர்கல்வியும் இன்று இராணுவ மயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் மீதான விவாதம் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், இலங்கையில் 30 வருப் போர் இடம்பெற்றமைக்கும் உயர்கல்வியில் ஏற்பட்ட நிராகரிப்புக்களே காரணம் எனக் கூறியுள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

இலங்கையில் 1970களில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட காரணம் இந்தக் கல்வி முறையில் ஏற்பட்ட நிராகரிப்பாகும். 1948 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் கூட கல்வித்துறையில் ஏற்பட்ட தலையீடுகள் காரணமாகவே எமது தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சிறிமாவோ பண்டாரநாயக காலத்தில் கல்வித்துறையில் தமிழ் மாணவர்களுக்கு அநியாயம் இடம்பெறுவதாக தெரிந்துகொண்டு அதனை எதிர்த்து ஆயுதம் ஏந்த நிர்பந்திக்கப்பட்டனர் என்பது இன்று பலருக்கு தெரியாது போயுள்ளது.

கல்வி என்பது ஒரு நாட்டின் முக்கியமான துறையாகும். இது சகலரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றாகும். அவ்வாறு இருக்கையில் சகல துறைகளிலும் இன்று இராணுவ மயமாக்கல் இடம்பெற்று வருகின்றது. கொவிட் கட்டுப்பாட்டு நிலைமைகளாக இருந்தாலும், சட்டம் ஒழுங்கு அமைச்சும் இராணுவத்தின் மூலமாகவே நிர்வகிக்கப்படுகின்றது.

விவசாயத்திலும் அவர்கள் கை வைத்துள்ளனர். இந்த நிலை இன்று உயர் கல்வியிலும் கை வைக்கும் நிலை உருவாகியுள்ளது. இன்று கொண்டுவந்துள்ள சட்டமூலம், உயர் கல்வி அமைச்சிற்கு கீழ் வரவில்லை, மாறாக பாதுகாப்பு அமைச்சருக்கு கீழேயே கொண்டுவரப்படுகின்றது.

எனினும் தேரர்களுக்கு உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் கூட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு கீழ் உள்ளதென்றால் இராணுவ பல்கலைக்கழகமும் அவ்வாறே கொண்டுவரப்பட வேண்டும்.

அதேபோல் இராணுவத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு பி.எச்.டி பட்டதாரிகளாக மாற்றியமைக்கவா இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று முன்னெடுக்கும் இராணுவ மயமாக்களில் உயர் இராணுவ அதிகாரிகளை முனைவர் பட்டம் கொடுத்து ஏனையவர்களை மட்டந்தட்டும் நடவடிக்கைகளே இடம்பெறப்போகின்றது.

தேசிய பாதுகாப்பு கொள்கைத்திட்டம் என்னவென தெரிந்துகொள்ள முடியாத நிலை எமக்கு உள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்த கொள்கை என்னவென்பது சகலரும் தெரிந்துகொள்ள வேண்டும். இப்போதும் இராணுவ கொள்கைக்கு கீழ் சிவில் மாணவர்களுக்கும் கற்பிக்கவே முயற்சிக்கப்படுகின்றது.

இறுதி யுத்தத்தின் பின்னர் இப்போது வரையில் இராணுவத்தினர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தால் அதிகரித்துள்ளது. இவர்களுக்கு கொடுப்பனவுகள் எவ்வாறு வழங்கப்படுகின்றது. இன்றுள்ள நிலையில் இலங்கைக்குள் இன்னொரு யுத்தத்தில் இராணுவம் ஈடுபட வேண்டிய தேவை வராது, எனவே சர்வதேச சவால்களுக்கே இனி நாம் முகங்கொடுக்க வேண்டும்.

அவ்வாறு என்றால் இராணுவத்தை மட்டும் அல்ல, ஏனைய படைகளையும் பலப்படுத்த வேண்டும். ஆனால் இராணுவத்தை மாத்திரம் பலப்படுத்துவதன் நோக்கம் என்ன? யாருடன் சண்டையிட இராணுவம் பலப்படுத்தப்படுகின்றது.

எனவே இராணுவ மயமாக்கலை கைவிட்டு மாணவர்களுக்கான கல்வியை வழங்கும் நடவடிக்கைகளை, இலகு கடன் உதவிகளை பெற்றுக்கொடுத்து கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020