ஜே.வி.பியின் ஆட்சியை கவிழ்க்க திட்டமிடப்பட்ட சதியா அறுகம்குடா விவகாரம் !
நாடாளுமன்ற தேர்தலில் ஜே.வி.பி தனியாக 113 ஆசனங்களை பெற கூடாது என்பதற்காக சோடிக்கப்பட்ட பொய்யான விவகாரம்தான் அறுகம்குடா தாக்குதல் என இலங்கையின் (Sri Lanka) அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் (M.M Nilamdeen) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அறுகம்குடா விவகாரத்தை வைத்து ஜே.வி.பியிற்கு எதிராக குளிர்காய சிலர் நினைக்கின்றார்கள்.
இருப்பினும், ஜே.வி.பியிற்கு குறைந்தது 130 ஆசனங்களை பெறுவதற்கான வழிவகை இருக்கின்றது என்பதை என்னால் அடித்து கூறமுடியும்.
இதனால், ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றவர்கள் இதை வைத்து காய் நகர்த்த முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அறுகம்குடா தாக்குதலின் பிண்னணி, சுற்றுலா துறை, நாடாளுமன்ற தேர்தல் போன்ற பலதரப்பட்ட விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |