நாடு அநாதையாகிவிடும் - ரணிலை நெருங்கும் ஆபத்து; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
நாட்டின் தற்போதைய நிலையில் யாரும் விளையாடுவதற்கான நேரம் அல்ல. மாறாக மிகவும் தீவிரமான நேரம் இது என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, தற்போதைய நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சர்களை பாதுகாக்க நினைக்க மாட்டார், அவ்வாறு செய்தால் ராஜபக்சர்களுக்கு நிகழ்ந்ததே ரணிலுக்கும் நடக்கும் என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகம் ஒனறிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவித்திருப்பதாவது,
ராஜபக்சாக்களை காப்பாற்றுவாரா ரணில்
தற்போது, பசில் ராஜபக்ச தீவிரமான யோசனையில் இருக்கின்றார். 21ஆவது திருத்தத்தின் பின்னர் தான் எப்படி வாழப் போகின்றேன் என்ற யோசனையில் அவர் உள்ளார்.
ரணில் விக்ரமசிங்க இவ்வாறான சூழலில் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்க நிச்சயமாக நினைக்க மாட்டார். அவ்வாறு முயன்றால் அவருக்கும் அதே நிலைதான் ஏற்படும் என்பதை அவர் அறிவார்.
உறுப்புரிமையை இழக்கும் அபாய நிலை
[8I2CTAஸ
அதுமட்டுமன்றி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமை இல்லாமல் போகும் அபாயத்தில் உள்ளது. ஒன்று பசில் ராஜபக்ச மற்றொன்று கீதா எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கோட்டா கோ கம போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாக கோட்டாபய பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
ஆனால் அரச தலைவரும் பதவி விலகி, நாடாளுமன்றமும் இல்லாமல், பிரதமரும் இல்லையெனில் இலங்கை அநாதையாகிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
