வெற்றிக்கொண்டாட்டத்தில் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட கோட்டாபயவின் உருவ பொம்மை!
மட்டக்களப்பு - செங்கலடி கோட்டா கோ கம போராட்டக் களத்தில் கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறியமையை முன்னிட்டு வெற்றிக் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கேக் வெட்டி, வெடி கொள்ளுத்தி, கோட்டபாய ராஜபக்க்ஷவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி வெற்றிக் கொண்டாட்டம் இடம்பெற்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கேட்டா கோ கம போராட்டக்காரர்கள், கோட்டா கோ கம போராட்ட இடத்தில் கோட்டபாய ராஜபக்ச அதிபர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.சுரேந்திரன் தலைமையில் தமது வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாடினர்.
மட்டக்களப்பில் வெற்றிக்கொண்டாட்டம்
இதேவேளை தமது போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாக கபுடா என வாசகம் பொறிக்கப்பட்ட கேக் ஒன்றையும் வெட்டி போராட்ட இடத்தில் பரிமாறிக் கொண்டதுடன் பொது மக்களுக்கு குளிர்பானமும் வழங்கினர்.















