முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில்!

Batticaloa Mullaitivu Mullivaikal Remembrance Day Sri Lanka Tamil National Alliance
By Kalaimathy May 18, 2022 06:22 AM GMT
Report

இலங்கையில் தமிழின அழிப்பு நடவடிக்கைகள் காலத்திற்கு காலம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் தமிழர்களின் மனங்களில் நீங்கா இடம்கொண்டதாக முள்ளிவாய்க்கால் இன அழிப்பு உருவெடுத்துள்ளது.

இன்று முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாள் இலங்கை உட்பட சர்வதேசங்களிலும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாள் நிகழ்வு இன்று மட்டக்களப்பு கல்லடி சித்திவிநாயகர் ஆலய முன்றிலில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் உபதலைவரும் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராசா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில்! | Sri Lanka Batticalo Mullivaikal Mullaitivu

இதன் போது உயிர்நீர்த்தவர்களின் நினைவாக ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் கூட்டுப்பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவர் சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண அமெரிக்க மிசனின் குரு முதல்வர் அருட்தந்தை லூத் ஆகியோரினால் இந்த கூட்டுப்பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டன.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில்! | Sri Lanka Batticalo Mullivaikal Mullaitivu

இதன்போது முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் வேதனைகளை வெளிப்படுத்தும் வகையிலான முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பகிரப்பட்டது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், முன்னாள் நாடாளுமுன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம், முன்னாள் கிழக்கு மாகாண உதவி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், தவிசாளர்கள், உறுப்பினர்கள், வாலிப முன்னணி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். 

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில்! | Sri Lanka Batticalo Mullivaikal Mullaitivu



 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016