வாழைச்சேனையில் பயங்கரம்- அதிகாலையில் இடம்பெற்ற கொலை முயற்சி!

murder arrest police sri lanka valaichenai batticalo
By Kalaimathy Feb 28, 2022 08:50 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

மட்டக்களப்பு பிரதேசத்தில் பெண் ஒருவரை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவில் இன்று திங்கட்கிழமை அதிகாலை கொலை செய்யும் முயற்சி இடம்பெற்றுள்ள நிலையில் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

வாழைச்சேனை எஸ்.எல்.ஹாஜியார் வீதியில் வசித்து வந்த 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த திருடன் வயோதிபப் பெண்ணின் காதினை அறுத்ததுடன், உன்னிடம் உள்ள சங்கிலியையும் தா என்று கழுத்தினை நெருக்கிய போது, அவர் சத்தமிட்டதையடுத்து வாயில் அடித்து பல்லினை உடைத்துள்ளார்.

இச்சந்தர்பத்தில் பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த  சகோதரியின் மகன்  சத்தம் கேட்டு சத்தம் எழுப்பிய போது திருடன் தப்பி சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக திருடனின் அடையாளங்களை உறவினர்கள் தெரிவித்ததற்கமைய வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் வாழைச்சேனை காவல்துறையினர் உதவியுடன் அப்பகுதியிலுள்ள 21 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் காயமுற்ற வயோதிப பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன்,  திருடப்பட்ட நகைகள் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தோடு வாழைச்சேனை தபால் நிலைய வீதியில் தூக்கத்தில் இருந்த பெண்ணின் கை சங்கிலியை அறுத்து சென்றுள்ள சம்பவமும் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் திருட்டுச் சம்பவமும், அதனுடன் இணைந்து கொலை முயற்சியும் இடம்பெற்று வருவதால் பிரதேச மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

இவ்வாறான திருடர்கள் மீண்டும் எங்கள் பிரதேசத்தில் திருடாமலும், கொலை முயற்சி செய்யாமலும் இருப்பதற்கு வாழைச்சேனை காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பிரதேசத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனையால் இவ்வாறான கொலையுடன் கூடிய திருட்டுச் சம்பவம் இடம்பெற்று வருவதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போதைப் பொருள் பாவனையால் பலமுறை சிறைச்சாலைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025