ராஜபக்ச குடும்பத்திற்கு மக்கள் தக்க பாடம் படிப்பிக்கத் தயாராகவிருக்கிறார்கள்!

sri lanka government batticalo eastern province gotabaya press meet sunil hanthunnethi
By Kalaimathy Jan 21, 2022 08:54 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

சிறிலங்கா அரச தலைவரின் நாடாளுமன்ற உரையை ஒரு பொறுப்பற்ற உரையாகவே நாங்கள் பார்க்கின்றோம் என சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளர்.

இன்று மட்டக்களப்பில் இந்த ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாடு இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கம் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

நாடாளுமன்றத்தில் ஒரு உரையை ஆற்றுவதாக இருந்தால் அது பலரிடமும் ஆராய்ந்து பேசவேண்டும் நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சானது ஒரு பொறுப்பற்ற செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இந்த ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். மக்கள் எங்களிடம் கேட்கின்றனர் ஆட்சியை எவ்வாறு மாற்றுவது என்று, அவர்களிடம் நான் கேட்கின்றேன் இன்று ஆட்சி செய்வது யார்? கோட்டாபய குடும்பத்தினர் மட்டும் தானே, ஆகவே மிக விரைவில் இந்த ஆட்சியாளர்கள் வீடு செல்வார்கள்.

இன்று நாட்டில் அரிசி, உரம் , டொலர் பிரச்சனை இவை எல்லாமே ஒரு நாடகமாக தான் நாங்கள் பார்க்கின்றோம். ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக ஒன்று சேர்ந்தவர்கள் இன்று பல கதைகளை கூறுகின்றனர். தெற்கு வர்த்தகர்கள் கூறுவதைத் தான் கிழக்கிலுள்ள வர்த்தகர்களும் கூறுகின்றனர்.

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும். இன்று எல்லாத்துக்கும் விலைவாசி அதிகரித்துக் காணப்படுகின்றது. வாங்குவதற்கு பொருள் இல்லை காஸ் வெடிப்பு என்கின்றார்கள் இது எல்லாமே ஒரு நாடகம்.

இலங்கையில் டொலர் இல்லை என்பவர்கள் பாலங்களை அமைக்கின்றார்கள், வீதிகளை அமைக்கிறார்கள், சொகுசு வாகனங்கள் இறக்குகின்றார்கள், பாதுகாப்புக்கு பல வாகனங்களில் செல்கின்றார்கள், டொலர் இல்லை என்றால் எவ்வாறு இப்படி செயல்பட முடியும்.

இந்த ராஜபக்ச குடும்பத்தின் நாடகத்தை மக்கள் தற்போது உணர்ந்து வருகின்றனர். மிக விரைவில் ராஜபக்ச குடும்பத்தினருக்கு மக்கள் தக்க பாடம் படிப்பிக்க காத்திருக்கிறார்கள். என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஆகவே கிழக்கு மாகாணத்திலுள்ள குறிப்பாக மட்டக்களப்பு மக்களும் எங்களோடு சேர்ந்து நாங்கள் விட்ட பிழைகளையும் எதிர்காலத்தில் நாங்கள் செய்யக்கூடிய விடயங்களையும் கலந்து ஆலோசித்து பேசி ஒரு நல்லதொரு ஆட்சியை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026