சிறிலங்காவின் அதிபர் மாளிகைக்குள் வைத்து கைது செய்யப்பட்ட இளைஞன்
Sri Lanka Army
Sri Lanka Police
Galle Face Protest
President of Sri lanka
Crime
By pavan
சிறிலங்கா அதிபர் மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர் மத்தியில் சிறிய கஞ்சா பொதியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை அதிபர் மாளிகையின் நீச்சல் தடாகத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த நபரை அங்கு பணியாற்றிய காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
மீரிகம பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டதாகவும், கஞ்சா அடங்கிய சிறிய பொதி கண்டுபிடிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக கோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
