இலங்கை மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம் - வெளியானது அறிவிப்பு!
இலங்கை மத்திய வங்கி பொருளாதாரத்தின் முக்கிய ஆர்வலர்களுடனான ஈடுபாட்டினை விரிவுபடுத்தும் நோக்குடன் குழு ஒன்றை நிறுவியுள்ளது.
இந்தக் குழுவிற்கு கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் பேராசிரியரான சிறிமால் அபேரத்ன தலைமை வகிப்பதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
முன்னர் தொழிற்பட்ட இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை ஆலோசனைக் குழு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழு என்பவற்றை மாற்றீடுசெய்து ஆர்வலர் ஈடுபாட்டுக் குழுவ நிறுவப்பட்டுள்ளது.
பொருளாதார மீட்சி தொடர்பான ஆலோசனைக் குழு
ஆர்வலர் ஈடுபாட்டுக் குழுவின் ஆரம்பக் கூட்டம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட அலுவலர்களின் பங்கேற்புடன் இலங்கை மத்திய வங்கியில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த ஆர்வலர் ஈடுபாட்டுக் குழுவில் உறுப்பினர்களாக, தனியார்துறையையும் கல்வித்துறையையும் சேர்ந்த தலைசிறந்த 17 பேர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள், ஒட்டுமொத்த பொருளாதாரம், நாணய மற்றும் நிதியியல் துறைகளின் அபிவிருத்தியினைக் கருத்திற் கொண்டு பொருளாதார நிலைமைகள் மற்றும் தோற்றப்பாடு தொடர்பில் அபிப்பிராயங்களையும் எண்ணப்பாங்குகளையும் எடுத்துரைப்பதே முதன்மை பணியாகும்.

