சிறிலங்காவிற்கான முதலாவது நிதி வழங்கல் தொடர்பில் ஐஎம்எஃப் முக்கிய அறிவிப்பு!
சிறிலங்காவிற்கு வழங்கும் நிதியுதவி குறித்து இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்களைப் பெற்ற பின்னர், சர்வதேச நாணய நிதியத்தால் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து கிடைக்கவுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநாடு
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
சர்வதேச நிதி நெருக்கடியின் எதிர்கால வேலைகளுக்கு கடன் வழங்குநர்களிடமிருந்து வரும் ஒப்பந்தம் ஒரு தீர்க்கமான காரணியாக இருக்கும்.
சிறிலங்காவிற்கு முன்னுரிமை
கடன் மறுசீரமைப்புக்கான இணக்கப்பாட்டையும் ஒப்புதலையும் சிறிலங்கா, கடன் வழங்குனர்களிடம் இருந்து பெற ஆரம்பிக்கும்.
இது சர்வதேச நாணய நிதியதிடம் இருந்து சிறிலங்கா உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான முன்னுரிமையளிக்கப்பட்ட விடயமாக உள்ளது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
