மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்பது தொடர்பில் இந்திரஜித் வெளியிட்டுள்ள தகவல்!
Central Bank of Sri Lanka
Ranil Wickremesinghe
Sri Lanka
Ministry of Finance Sri Lanka
Indrajith Kumaraswamy
By Kalaimathy
இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்த இக்கட்டான நேரத்தில் மத்திய வங்கியின் ஆளுநராக முக்கியப் பங்காற்றி வருவதாக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் மத்திய வங்கி ஆளுநரில் மாற்றம் ஏற்படலாம் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன் போது மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் பதவியேற்கும் எண்ணம் தனக்கு இல்லை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் திருவிழா

மரண அறிவித்தல்