சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க ஒன்றிணையும் இரு துருவங்கள்!
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவுவதற்கு சீனாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்துள்ளன.
இரு நாட்டு தூதுவர்களுக்கிடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன மற்றும் அமெரிக்க தூதுவர்கள் சந்திப்பு
சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் கி ஸென்ஹொங் மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இதன்போது, பரஸ்பர ஆர்வமுள்ள, பரந்த விடயப்பரப்பு தொடர்பில் நட்பு ரீதியிலான கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை தற்போதைய நெருக்கடிகளை சமாளிக்க இலங்கைக்கு உதவுவதற்கு சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட முடியும் என சிறிலங்காவிற்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
?? Ambassador Qi Zhenhong met with ?? Ambassador Mme. Julie Chung @USAmbSL at the Chinese Embassy on 13th June and had a friendly discussion on broad topics of mutual interest.#China and the #UnitedStates could work together to help #SriLanka overcome current difficulties. pic.twitter.com/yZNMdswNEL
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) June 13, 2022
