பெரமுனவுடன் மேலும் உறவை வலுப்படுத்தும் திட்டத்தில் சீன கம்யுனிஸ்ட் கட்சி!
சீன கம்யுனிஸ்ட் கட்சி சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆகியவற்றிற்கு இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு ஆர்வமாக உள்ளோம் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை சீன தூதரகம் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கு ஆர்வம் கொண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
ஜி ஜின்பிங்கிற்கு மகிந்த வாழ்த்து
சீன கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக ஜி ஜின்பிங் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து மகிந்த ராஜபக்ச வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதை தொடர்ந்தே சிறிலங்காவிற்கான சீன தூதரகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
Thank you Your Excellency.
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) October 23, 2022
We look forward to further enhancing the friendship and exchanges between the #CPC and @PodujanaParty. https://t.co/UEDbnLhd2K