இலங்கையுடனான உறவை மேம்படுத்தும் சீனாவின் புதிய திட்டம் - மீண்டும் வழங்கும் நன்கொடை
இலங்கை சீன நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் சீனாவிடம் இருந்து மற்றுமொரு நன்கொடை கிடைக்கப்பெற்றுள்ளது.
சீனாவிடம் இருந்து 1,000 மெற்றிக் தொன் (100,000 பொதிகள்) கொண்ட அரிசி தொகை இன்று (19) காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்காக சீனாவினால் இவ் உதவி வழங்கப்படுவதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
டுவிட்டர் பதிவு
குறித்த அரிசித் தொகை விரைவில் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 7,000 மெட்ரிக் தொன் (700,000 பொதிகள்) அரிசித் தொகை நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
A new consignment of 1000 metric tonnes (100,000 packs) rice donated by #China to #SriLankan island-wide schools has arrived at Colombo Port this morning (19th) and will be distributed soon.
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) November 19, 2022
A total of 7000 MT (700,000 packs) ??aided rice have been handed over to ?? since June. pic.twitter.com/f4ecgws7cq
