சகல குடிமக்களுக்கும் நட்புறவின் கரத்தை நீட்டுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை!
துரதிஷ்டவமான நிலைமையில் இருக்கும் நாட்டை மீட்டெடுப்பதற்காக சல அரசியல் தலைவர்களும் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற தேசிய மத மற்றும் தேசிய நல்லிணக்கத்திற்கான மொனராகலை மாவட்ட மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் மற்றும் ஐக்கியத்தின் அடிப்படையிலேயே உலகில் அழிந்து போன நாடுகள் வலுவான நாடுகளாக உருவெடுத்தன.
இதனால், சகல குடிமக்களுக்கும் நட்புறவின் கரத்தை நீட்டுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன். இன, மத பேதங்களை ஏற்படுத்த ஒரு சிறுத்தரப்பினர் முயற்சித்து வருகின்றனர்.
நாட்டை மீண்டும் தீயிட இடமளிக்காது, தேசிய மத ஐக்கியம் மற்றும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்புமாறு தேசிய தலைவர்கள் மற்றும் முழு இலங்கை மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
அரசியல் தேர்தல் காலங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது. நாடு எதிர்நோக்கியுள்ள துரதிஷ்டவசமான நிலைமையில் இருந்து நாட்டை மீட்க சகல அரசியல் தலைவர்களும் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுக்கு வருவோம்.
உலகில் இலங்கை தனித்து இயங்க முடியாது. சர்வதேசத்தின் நம்பிக்கை மற்றும் கௌவரத்தை நாம் சம்பாதிக்க வேண்டும்.
ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கும் நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்கள் அணித்திரண்டு வருவார்கள்.
இதனால், அனைத்து குடிமக்களுக்கும் நட்புறவின் கரங்களை நீட்டுங்கள் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
ஜே.விபியால் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படப்போகும் இறுதி பேரழிவு 52 நிமிடங்கள் முன்