அலரி மாளிகையில் கொள்ளை - முக்கிய ஆவணங்களும் அழிப்பு!
Sri Lanka Police
Prime minister
Sri Lanka
SL Protest
Sri Lanka Police Investigation
By Kalaimathy
சிறிலங்கா பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் உள்ள ஊடகப்பிரிவில் இருந்த உபகரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதமரின் ஊடகப்பிரிவு கொள்ளுப்பிட்டி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
அதனடிப்படையில், ஊடகப்பிரிவில் இருந்த இரண்டு மடிக்கணனிகள், வீடியோ கமரா, கமரா உபகரணங்கள் என்பன இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அலரிமாளிகையில் குடியேறாத ரணில்
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர் அலரி மாளிகையில் குடியேறவில்லை. பிரதமரின் ஊடகப்பிரிவின் ஒரு பகுதி மாத்திரம் அலரி மாளிகையில் ஏற்படுத்தப்பட்டது.
சுவர்களை துளைத்து கொள்ளை
மேலும் அலரி மாளிகையின் சுவர்களுக்கு இடையில் பெரிய துளைகள் போட்டப்பட்டுள்ளன. கதவுகள் உடைக்கப்பட்டு ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








