ஒன்பது வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: ஒரு வருடத்திற்கு பின் சிக்கிய கான்ஸ்டபிள்
மட்டக்களப்பில் (Batticaloa) சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்திய காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் ஒன்பது வயது சிறுமியை தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (03) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தகாதமுறை
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு காவல் நிலையத்தில் கடமையாற்றி வரும் மொன்ராகலை புத்தல காவல் பிரிவு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் விடுமுறையில் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்தநிலையில், சம்பவதினமான அன்று குறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் மோட்டர் சைக்கிளில் பிரயாணித்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமியின் தாயார் பாடசாலைக்கு சென்றுள்ளதாகவும் வரும் போது சிறுமியையும் ஏற்றிக் கொண்டுவந்து விடுமாறு கோரியுள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறுமியை பாடசாலையில் இருந்து ஏற்றிச் சென்ற காவல்துறை உத்தயோகஸ்தர், சிறுமியை மறைவான காட்டு பகுதியில் வைத்து தகாதமுறைக்கு உட்படுத்தியுள்ளார்.
விழிப்புணர்வு
இதன்பின்னர் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த ஒருவருடமாக பெற்றோரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்தநிலையில் கடந்த வாரம் பாடசாலையில் மாணவர்களுக்கு சிறுவர் வன்புணர்வு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதன் போதுதான் குறித்த சிறுமி காவல்துறை உத்தியோகஸ்தரால் தான் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதை உணர்ந்துள்ளார்.
காவல்துறையினர் நடவடிக்கை
இதனையடுத்து ஒரு வருடத்துக்கு முன்னர் இவ்வாறு குறித்த காவல்துறை உத்தியோகஸ்தரால் தான் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாக சிறுமி கடிதம் ஒன்றை எழுதி ஆசிரியரிடம் கொடுத்துள்ளார்.
இந்த விடயம், அதிபர் மற்றும் பெற்றோர் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில் காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
