இலங்கையில் கொரோனா மரணம் மேலும் அதிகரிப்பு
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 71 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12,680 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 39 பெண்களும் 32 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் இன்று இதுவரை மேலும் 747 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
அதனடிப்படையில் நாட்டில் இதுவரை 513,278 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
