கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் மேலும் 18 பேர் நேற்று(30) கொவிட் தொற்றால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 13,743ஆக அதிகரித்துள்ளது. 60 வயதிற்கு மேற்பட்ட 18 பேரின் மரணங்களே இவ்வாறு பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவேளை, இன்று இதுவரை நாட்டில் மேலும் 388 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 540,919 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.