இலங்கையில் மேலும் 9 கொவிட் மரணங்கள் பதிவு
COVID-19
Sri Lanka
Ministry of Health Sri Lanka
By Vanan
இலங்கையில் மேலும் 9 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி நேற்று (9) உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றைய புதுப்பிக்கப்பட்ட அறிக்கை
4 ஆண்கள் மற்றும் 5 பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இன்றைய புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று 7 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்திருந்தனர்.
இதுவரை பதிவான கொவிட் மரணங்கள்
இதன்படி, நாட்டில் இதுவரையில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 604 ஆக அதிகரித்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி