இலங்கையின் இன்றைய கொவிட் நிலவரம்
covid
sri lanka
death
patient
By Vanan
இலங்கையில் மேலும் 10 கொவிட் மரணங்கள் நேற்று(13) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 16,407ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று உறுதியான மேலும் 345 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 656,041ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 20,758 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 75 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 618,961 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி