இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்களும் மரணங்களும் பதிவு!
covid
sri lanka
patient
By Vanan
இலங்கையில் கொரோனா தொற்றுறுதியான மேலும் 3,835 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 381,812 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை வரலாற்றில், ஒரே நாளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இன்று பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் அதிகூடிய கொரோனா இறப்புக்களாக 195 மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி