இலங்கையில் தீவிரமடையும் கொரோனா! 75 பேருக்கு புதிதாக தொற்று - இருவர் பலி
COVID-19
Sri Lanka
By Vanan
தீவிரமடையும் கொரோனா
இலங்கையில் இன்று கொவிட்-19 வைரஸினால் பீடிக்கப்பட்ட 75 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரை பதிவான கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 664,647 ஆக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 651 பேர் இன்னும் மருத்துவமனையிலும், வீட்டில் மருத்துவ மேற்பார்வையின் கீழும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது வரை மொத்தமாக கொவிட்-19 தொற்றிலிருந்து 647,463 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா மரணங்கள்
இதற்கிடையில், மேலும் 2 கொரோனா மரணங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்ட இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, இலங்கையில் பதிவான மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 16,533 ஆக அதிகரித்துள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்