நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடு!! இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிரடி முடிவு
இலங்கைக்கான அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தையும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளர் மொஹான் டி சில்வா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ஊடகங்களிடம் கருத்துரைத்த மொஹான் டி சில்வா டிக்கெட் விற்பனைக்கான முழுத் தொகையும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
2.5 மில்லியன் டொலர் வருமானம்
அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் மூலம் 2.5 மில்லியன் டொலர் வருமானத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, "அவுஸ்திரேலியாவின் சுற்றுப்பயணத்தின் பின்னர் பாகிஸ்தான் விரைவில் நாட்டிற்கு வரும், அதன் பின்னர் கொழும்பில் ஆசிய கிண்ணம் நடைபெறவுள்ளது உள்ளது, எனவே இந்த போட்டியை ஆதரிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்," என்று மொஹான் டி சில்வா மேலும் தெரிவித்தார்.