இலங்கை துடுப்பாட்ட போட்டி தொடரில் இணையும் ஜாம்பவான்கள்
இலங்கையில் நடைபெறும் சிறிலங்கா பிரீமியர் லீக் (SLPL) துடுப்பாட்ட போட்டியின் மூன்றாவது தொடர் ஆரம்பமாகவுள்ளது.
போட்டியானது டிசம்பர் 6 முதல் 23 வரை ஹம்பாந்தோட்டை, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய மூன்று சர்வதேச மைதானங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிதொடரில் துடுப்பாட்ட ஜாம்பவான்களான சர் விவியன் ரிச்சர்ட்ஸ், வாசிம் அக்ரம் மற்றும் சனத் ஜெயசூர்யா ஆகியோர் தர அடையாள தூதுவர்களாக (brand ambassadors)நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய வீரர்கள்
போட்டி அட்டவணையில் ஏற்பட்டதிருத்தம் காரணமாக இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர்.
சில இலங்கை வீரர்களுக்கு காயம் மற்றும் தனுஷ்க குணதிலக இல்லாததால், புதிய வீரர்களை ஏலம் இல்லாமல் தேர்வு செய்ய உரிமையாளர்களுக்கு அனுமதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களுக்கு பதிலாக 10 தொடக்கம்12 வீரர்களின் பெயர்களை தேர்வாளர்கள் வழங்கியுள்ளனர்.மீதமுள்ள வீரர்கள் ஏலமுறையின் போது
தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போலவே இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
