இலங்கை கிரிக்கெட் அணி தலைமையில் அதிரடி மாற்றம்: வெளியான தெரிவு குழுவின் முடிவுகள்
இலங்கை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று போட்டிகளுக்கான அணிகளுக்கு புதிய தலைவர்களை நியமிக்க உபுல் தரங்க தலைமையிலான புதிய தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.
டெஸ்ட் அணித்தலைவர் தனஞ்சய டி சில்வாவுக்கும், ஒருநாள் போட்டித் தலைவர் பதவி குசல் மெண்டிஸுக்கும், இருபதுக்கு 20 அணித்தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கும் வழங்க தெரிவுக்குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, டெஸ்ட் அணியின் தலைவர் பதவியை தனஞ்சய டி சில்வாவுக்கும், உப தலைவர் பதவியை குசல் மெண்டிஸுக்கும் வழங்க புதிய தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தெரிவுக்குழுவின் தீர்மானம்
மேலும், இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் வழமையான தலைவர் பதவியை குசல் மெண்டிஸுக்கு வழங்க புதிய தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதுடன் அதன் துணைத் தலைவராக சாரிட் நியமிக்கப்படவுள்ளார்.
புதிய தெரிவுக்குழுவின் முடிவின்படி டி20 போட்டியின் தலைவராக வனிந்து ஹசரங்கவும் உப தலைவராக சரித் அசன்லகவும் செயற்படவுள்ளனர்.
26 வயதான வனிந்து ஹசரங்க இந்த வருட சிறிலங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் Be Love Candy அணியை வழிநடத்தி சம்பியன்ஷிப்பை தனது அணிக்கு கொண்டு வர முடிந்தது.
அத்துடன், உபுல் தரங்க தலைமையிலான தெரிவுக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.