இலங்கை கிரிக்கெட்டில் வேலைவாய்ப்பு: வெளியாகியுள்ள அறிவிப்பு
Cricket
Sri Lanka Cricket
Sri Lankan Peoples
By Dilakshan
இலங்கை கிரிக்கெட் நிறுவனம், தேசிய ஆண்கள் அணிக்கான துப்பாட்டம், களத்தடுப்பு மற்றும் சுழல் பந்து பயிற்சியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பானது, விளம்பரம் ஒன்றினால் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விண்ணப்பதாரர்கள் நிரூபிக்கப்பட்ட பயிற்சி பதிவு, முதல் தர அனுபவம் மற்றும் வீரர் மேம்பாடு மற்றும் கிரிக்கெட் தொழில்நுட்பத்தில் வலுவான திறன்களைக் கொண்டிருக்க வேண்டும்.
உள்ளூர் பயிற்சியாளர்கள்
இந்த நிலையில், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கணிசமான மாற்றங்களோடு இலங்கை ஆண்கள் அணி தற்போது முழுமையாக உள்ளூர் பயிற்சியாளர்களைக் கொண்டுள்ளது.
அத்தோடு, இலங்கை கிரிக்கெட்டின் உயர் செயல்திறன் கொண்ட பதவிகள் உள்ளூர் பயிற்சியாளர்களாலேயே பெரும்பாலும் நிரப்பப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்