தந்தையின் இரண்டாவது மனைவி கொடுமை! 9 வயது சிறுமி காவல் நிலையம் சென்று நேரடியாக முறைப்பாடு
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Kanna
9 வயது சிறுமி ஒருவர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்த குறித்த சிறுமியின் தந்தையின் இரண்டாவது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடுவளை பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கடுவளை பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி, கடுவளை காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று முறைபாடொன்றை செய்துள்ளார்.
தனது தந்தையின் இரண்டாவது மனைவி, தன்னை தொடர்ச்சியாக தாக்கி வருவதாகவும், தன்னை காப்பாற்றுமாறும் கோரி அவர் காவல் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.
அத்துடன், சிறுமியின் உடலில் பல்வேறு காயங்கள் காணப்படுவதை அவதானிக்க முடிந்ததாக கலவத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சிறுமியிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், சந்தேகநபரான பெண்ணை கைது செய்துள்ளனர்.


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 4 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்