கொழும்பில் 10 அமெரிக்க ஹெலிகள்: ஐராவத் -சுரக்சா டீல்கள்...!
புதிசு கண்ணா... புதிசு என்ற வகையில் அமெரிக்காவால் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட TH-57 (சீ ரேஞ்சர்) ஹெலிகள் கொழும்பு துறைமுகத்தில் வந்து இறங்கிய கையுடன் என்னே ஆச்சரியம் அதே கொழும்பு துறைமுகத்தில் நேற்று நங்கூரமிட்ட இந்திய கடற்படையின் ஐராவத் போர்க்கப்பலில் இருந்து சிறிலங்காவின் சுரக்ஷா போர்க்கப்பலுக்குத் தேவையான முக்கிய உதிரி பாகங்கள்... இனாம் ஐயா... இனாம் என்ற அடிப்படையில் இறக்கப்பட்டன.
இந்து சமுத்திரத்தின் கேந்திர அமைவிடத்தில் உள்ள இலங்கைக்கு இப்படிச் சிறிலங்காவின் வான்படைக்கு உதவ, கடற்படைக்கு உதவ என எல்லா இடங்களிலும் இருந்து உதவி வந்தாலும் சாமானிய இலங்கையரின் வாழ்வு என்னவோ நெருக்கடியில் தான் உள்ளது.
சிறிலங்காவின் பௌத்த பிக்குகளின் முறைகேடுகள் இப்போது முக்கிய பேசுபொருளாக, இந்தப் பிரச்சினையைத் தமிழர்களின் பகுதியில் இருந்து மடைமாற்றுவதற்காகவோ என்னவோ, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பௌத்த மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரக் கூடுகள் சேதப்படுத்தப்பட்டதான செய்திகளும் முளைத்த நிலையில் இந்த விடயங்கள் எல்லாவற்றையும் தொட்டுவருகிறது செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |