அடுத்தடுத்து இலங்கை வரும் கப்பல்கள் - எரிபொருள் இறக்குமதி தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு
இலங்கைக்கு மேலும் 30,000 மெற்றிக் தொன் சுப்பர் டீசலை நாளை (24) இறக்க எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரபூர்வ டுவிட்டர் தள பதிவு ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் 25 முதல் 26 வரையான காலப்பகுதியில் மற்றொரு ஒட்டோ டீசல் கப்பல் வரும் எனவும், ஓகஸ்ட் 27 - 29 திகதிகளில் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் கப்பல் வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகம்
இதேவேளை மண்ணெண்ணெய் மற்றும் ஜெட் எரிபொருள் விநியோகம் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Fuel Update -
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 23, 2022
• 30,000 MT of Super Diesel to be unloaded tomorrow
• 2nd Ural Crude Oil Cargo due to arrive later today
• Auto Diesel Cargo to arrive 25-26th
• Petrol 92 cargo to arrive on the 27-29th
• Commenced Kerosene & Jet Fuel distribution from yesterday

