சிறிலங்காவுக்கு எரிபொருள் வழங்க அவுஸ்திரேலியா எடுத்துள்ள நடவடிக்கை
சிறிலங்காவின் கடற்படை மற்றும் வான்படைகளுக்கான எரிபொருளை வழங்குவதற்கு இந்தியாவுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் இணைந்து சிறிலங்காவின் கடற்படை மற்றும் வான்படைக்கான எரிபொருள் உதவிக்காக செயலாற்றுவது நாடுகடந்த குற்றங்களுக்கு எதிரான நீண்டகால ஒத்துழைப்பைத் தொடர உதவும் என கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.
பிராந்திய பாதுகாப்பு
இந்தியப் பெருங்கடல் அண்டை நாடுகளாக, மூன்று நாடுகளும் பிராந்தியத்தை பாதுகாப்பதில் உறுதிப்பாட்டை பகிர்ந்துகொள்வதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீஃபன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி
Australia is pleased to be working with India to provide fuel to Sri Lanka’s navy and air force. It will help our longstanding cooperation against transnational crime to continue. As Indian Ocean neighbours, all three counties share a commitment to preserving regional security.
— Australia in Sri Lanka and Maldives (@AusHCSriLanka) August 22, 2022
சிறிலங்காவின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருளை வழங்குவதற்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதில் அவுஸ்திரேலியா மகிழ்ச்சியடைவதாக அவர் கூறியுள்ளார்.