சிறிலங்கா நோக்கி விரைந்த ஜப்பானின் இரண்டு போர்க்கப்பல்! (படங்கள்)
Japan
Russia
Ukraine
SriLanka
SL Navy
By Chanakyan
ஜப்பானிற்குச் சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக சிறிலங்கா கடற்படையின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கப்பல்கள் ஜப்பானிய தற்காப்பு படைக்கு சொந்தமானது என சிறிலங்கா கடற்படை அறிவித்துள்ளது.
கண்ணிவெடி அகற்றும் முதலாவது படைப்பிரிவு கப்பலான ´URAGA´ நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது.
மேலும் ´HIRADO´ என்ற போர்கப்பல் இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது. இவை நாளைய தினம் நாட்டிலிருந்து செல்லவுள்ளன.
இந்த இரு கப்பல்களும் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன என்று சிறிலங்கா கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்