அநுரவை சுற்றும் பாம்புகள் : அழிவுகளை தடுப்பாரா - அடித்து விரட்டப்படுவாரா !
இலங்கையின் தற்போதைய அரசியல் களமானது பாரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்ற ஒரு விடயமாக மாற்றமடைந்துள்ளது.
குறித்த மாற்றமானது மக்களிடையேயான எதிர்ப்பார்ப்பையும் மற்றும் தற்போதைய அரசின் மீதான நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது.
காரணம் கடந்த கால அரசியல் தெரிவுகளால் மக்கள் எதிர்நோக்கிய இன்னல்களும் பொருளாதார நெறுக்கடிகளும் அவர்களை பாரிய மனவுளைச்சல் மற்றும் வாழ்வாதார ரீதியில் அதிக நெறுக்கடிக்கு முகம் கொடுக்க வழிசமைத்தது.
இதனால், மூத்த மற்றும் இலங்கையில் பரம்பரை பரம்பரையாக அரசியலில் ஆதிக்கம் கொண்டிருந்த அரசியல்வாதிகள் மீதான தனது ஆதங்கத்தை காட்டுவதற்காக இந்த தேர்தல் களத்தை மக்கள் பயன்படுத்தி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) ஆட்சியை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளனர்.
கடந்த காலங்களிலும் கூட மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களே மக்களால் விரட்டியடிக்கப்பட்ட விடயம் அனைவரும் அறிந்ததே, இந்தநிலையில் என்றுமில்லாத அளவில் மக்களின் நம்பிக்கைக்கு உரித்தான அநுரவின் ஆட்சியும் மக்களுக்கு ஆதரவாக அமையவில்லை என்றால் அவரின் எதிர்கால அரசியலும் அங்கு கேள்விக்குறியாகவே அமையும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்களும் இல்லை.
இவ்வாறான சூழ்நிலையில், சர்வதேச ரீதியிலும் மற்றும் உள்நாட்டிலும் அநுரவின் மீதான அரசியல் போட்டி அதிகரித்துள்ள நிலையில் அதனை எதிர்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அநுர வெற்றி கொள்வாரா என்பது சவாலான ஒரு விடயமாக அமைந்துள்ளது.
இவ்வாறு, அநுரவின் ஆட்சி மாற்றம், அடுத்தக்கட்ட நடவடிக்கை, எதிர்கால அரசியல் நகர்வு மற்றும் சர்வதேசத்தின் இலங்கை மீதான தாக்கம், பொருளாதார மற்றும் வாழ்வாதார நெறுக்கடி குறித்து அநுரவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்பவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐ.பி.சி தமிழின் பார்வைகள் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |