இரண்டு துண்டாக்கப்பட்ட உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!
ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புத்தளம் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் மூன்று மாடி கட்டிடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இனந்தெரியாத நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆராச்சிக்கட்டுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சடலம் உருகுலைந்த நிலையில் காணப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிலாபம் பிரதான நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி நவீன் இந்திரஜித் புத்ததாச, சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.
மாவட்ட நீதிபதியின் உத்தரவுக்கமைய மேலதிக விசாரணைகளுக்காக சடலம் சிலாபம் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறித்த கட்டிடத்தில் இருந்து பல நாட்களாக துர்நாற்றம் வீசியதால் நேற்று பிற்பகல் பிரதேசவாசிகள் கட்டத்திற்கு சென்று பார்த்த போது சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு அறையின் படுக்கையில் இரண்டு தனித்தனி துண்டுகளாக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் ஆராச்சிக்கட்டுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
