கடன் மறுசீரமைப்பு - பாரிஸ் கிளப் வெளியிட்ட தகவல்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Vanan
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு, நியாயமான சுமை பகிர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் மறுசீரமைப்பின் ஒப்பீடு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களுடனும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க விரும்புவதாக பாரிஸ் கிளப் தெரிவித்துள்ளது.
ஜப்பானிய மற்றும் இந்திய நிதி அமைச்சர்கள், இலங்கையின் கடன் வழங்குநர்களுக்கான பேச்சுவார்த்தை தளத்தை வொஷிங்டனில் அமைத்துள்ளதாக பாரிஸ் கிளப் தெரிவித்துள்ளது.
கடன் நிவாரண ஒப்பந்தம்

நேற்று முன்தினம் இதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
கடன் வழங்கும் குழுக்கள் எதிர்கால கடன் நிவாரண ஒப்பந்தத்திற்கான விதிமுறைகள் பற்றி பேசுகின்றன.
இந்தநிலையில், அனைத்து பொதுத்துறை கடன் வழங்குநர்களும், இந்த செயற்பாட்டில் பங்கேற்க வரவேற்கப்படுகிறார்கள் என்றும் பாரிஸ் கிளப் அழைப்பு விடுத்துள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி