மீண்டும் பால்மா கிடைப்பதில் சிக்கல்!!
sri lanka
milk powder
shortage
By Vanan
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் தேசிய பால்மா என்பவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
டொலர் தட்டுப்பாட்டின் காரணமாகவே நாடு முழுவதிலும் இத்தடை வலுப்பெற்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் அதிகாரி ஒருவர் இது குறித்து கருத்து வெளியிடுகையில்,
“இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவுக்கான கொடுப்பனவுகளை முறையாக செலுத்தாமையினால் வெளிநாட்டு பால் மா நிறுவனங்கள் புதிய கையிருப்புகளை அனுப்புவதில்லை.
தேசிய பால் மா விநியோகம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக தேசிய பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக'' குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 11 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி