இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!
Colombo
Jaffna
Kandy
Sri Lanka
By Raghav
இந்த வருடத்தில் கடந்த 06 மாதங்களில் 30,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் மட்டும் 12 டெங்கு மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அபாய வலயங்கள்
இதேவேளை, கொழும்பு (Colombo) மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதன் எண்ணிக்கை 6,965 ஆக காணப்படுகிறது.
கம்பஹா (Gampaha) மாவட்டத்தில் 3,126 பேரும், யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் 3,998 பேரும், கண்டி (Kandy) மாவட்டத்தில் 2,441 பேரும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 21 சுகாதார வைத்திய அதிகார வலயங்கள் டெங்கு அதிக அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி