நாட்டிற்குள் மேலும் இறக்குமதிகள் குறைக்கப்படும்? பசில் வெளியிட்ட அறிவிப்பு!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக இந்தியா, ஜப்பான், சீனா உட்பட நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த நாடுகளிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டுக்குள் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதிகளை மேலும் குறைக்க நேரிடும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும் எரிபொருள், மருந்து, அத்தியவசிய பொருட்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவுக்கு சென்று அந்நாட்டு அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாகவும் பசில் தெரிவித்துள்ளார். இதனை தவிர சர்வதேச நாணய நிதியத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய வெளிநாடு சென்றுள்ளதால், அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் நடந்ததுடன் நாட்டுக்குள் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு குறித்து கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.