வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மகிழ்ச்சியான அறிவித்தல்!
இலங்கையில் தற்காலிகமாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
குறித்த சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் வகையில் வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் அட்டைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே இதற்கான காரணமாகும். நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் அட்டைகளை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர், மூன்று மாதங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் வீட்டிற்கே அனுப்பப்படும்.
50,000 சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான அட்டைகளை கொள்வனவு செய்வதற்கு ஆறு இலட்சம் யூரோ தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, குறித்த அட்டைகளை நாட்டில் தயாரிக்கும் நோக்கத்துடன் பல நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
