இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு..!
இலங்கை, சவால் மற்றும் நெருக்கடியின் தருணத்தில் உள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இருப்பினும் இலங்கையில் ஜனநாயக மற்றும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்க ஒரு வாய்ப்பு உள்ளது எனவும் அன்டனி பிளின்கன் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (04) கம்போடியாவில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
பாராட்டுக்களை தெரிவித்த அலி சப்ரி
இதேவேளை, இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதில் அமெரிக்காவின் பங்களிப்பை தாம் பாராட்டுவதாக இலங்கை அமைச்சர் அலி சாப்ரி அன்டனி பிளின்கனிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராஜாங்க செயலாளரும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் இன்று(ஓகஸ்ட் 4) ஆம் மற்றும் நாளை(5) ஆம் திகதிகளில் கம்போடியாவில் நடைபெறும் 29 வது ஆசியான் பிராந்திய மன்றக் கூட்டத்தில் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.