குறைந்துள்ள வட்டி விகிதம்! மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

Shadhu Shanker
in பொருளாதாரம்Report this article
அரசாங்கம் நலன்புரித் திட்டங்களை ஆரம்பித்தபோது 35% ஆக இருந்த வட்டி விகிதம் இன்று 12% ஆகக் குறைந்துள்ளது என்று சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அநூப பஸ்குவெல்(Anupa Pascual) தெரிவித்துள்ளார்.
மேலும், இந்நாட்டில் பொருளாதார முறைமை, பணவீக்கம், சமூக நலன் ஆகிய பிரிவுகளை நோக்கி நகர்கிறது என்றார்.
அதிபர், ஊடக மையத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வட்டி விகிதம்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், மேலும் கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். தனிநபர்கள் அல்லது கட்சிகளால் அதனைச் செய்ய முடியாது. கட்சிகள் மற்றும் நபர்கள் மாறுவதால் ஒரு நாட்டின் பொருளாதாரம் மாற்றம் காணாது.
தேர்தல் நேரத்தில் எல்லையின்றி ஊழல் சொத்துக்கள் வந்துச் சேர்வதைத் தவிர்ப்பதற்காகவே தேர்தல் செலவுச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதனால் ஊழலுக்கு முக்கிய காரணம் தேர்தல் முறை என்று கூறிவிட முடியாது. தற்போது நடைமுறையில் உள்ள விருப்பு வாக்கு முறைமையினால், தேர்தலில் வெற்றிபெற ஒரு வேட்பாளருக்கு குறைந்தது 500 இலட்சம் ரூபாய் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார முறைமை
எனவே தற்போதுள்ள தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டியது அவசியம். அரசின் கொள்கைகள் பிரசித்தமடைந்துள்ளன. அந்த வேலைத்திட்டங்களுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவே (Ranil Wickramasinghe) தலைமை தாங்குகிறார் என்பது இரகசியமல்ல.
அதனை ஒவ்வொரு துறைசார் நிபுணர்களும், மக்களும், பிற கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
