சுவிஸிடம் உதவி கோரிய இலங்கை - உடன் கிடைத்த பதில்
Dr Wijeyadasa Rajapakshe
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Switzerland
By Vanan
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் குறித்து தாம் கரிசனை கொண்டுள்ளதாக சுவிஸ் தூதரான Dominik Furgler கூறியுள்ளார்.
நீதித்துறை அமைச்சரான விஜயதாச ராஜபக்ச, சுவிஸ் தூதரான Dominik Furglerஐ நீதித்துறை அமைச்சகத்தில் அண்மையில் சந்தித்தார்.
இதன்போது தமது நிலைப்பாட்டை வெளியிட்ட அவர், இலங்கை அவற்றை வெற்றிகொள்வதற்கு தம்மாலான உதவிகளை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதாரச் சூழல் குறித்து நீதி அமைச்சர் அவருக்கு விவரித்தார்.
இலங்கையும் சுவிட்சர்லாந்தும் வலுவான பொருளாதார மற்றும் அரசியல் நட்பு தொடர்பான நீண்ட வரலாறு கொண்டவை என்று கூறிய விஜயதாச ராஜபக்ச, இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சூழலை வெற்றிகொள்ள சுவிட்சர்லாந்தின் உதவியை கோரியிருந்தார்.


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி