துரதிஷ்ட நிலையை அடைந்த இலங்கை! பிரித்தானியா முன்வர வேண்டுமென வலியுறுத்தல்
இலங்கைக்கு பிரித்தானிய அரசாங்கம் வழங்கும் ஆதரவு, போதுமானதாக இல்லை என பிரித்தானியாவின் தொழில்முறை இராஜதந்திரியான சிறிமத் பீட்டர் ஹீப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கட்டாய உதவித் தேவை
கட்டாய உதவித் தேவையில் காணப்படும் இலங்கைக்கு, பிரித்தானியா மேலும் உதவிகளை வழங்க வேண்டும் என தொழில்முறை இராஜதந்திரியான சிறிமத் பீட்டர் ஹீப் தெரிவித்துள்ளார்.
உணவுப் பற்றாக்குறையினால் இலங்கையர்கள் பட்டினியில் வாடுவதாகவும், மருந்து மற்றும் எரிபொருள் பற்றாக்குறையினால், பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துரதிஷ்ட நிலையை அடைந்த இலங்கை
இந்த துரதிஷ்ட நிலையை இலங்கை எவ்வாறு அடைந்திருந்தாலும், பொதுநலவாய நாடு என்ற வகையில், இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் பிரித்தானியா முன்வர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் ஊடாக, பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு உதவிகளை வழங்குவதாக தெரிவித்த போதிலும் அது போதுமானதாக இல்லை என, பிரித்தானியாவின் தொழில்முறை இராஜதந்திரியான சிறிமத் பீட்டர் ஹீப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
