நாட்டின் அசாதாரண சூழ்நிலையை போக்கும் நோக்கில் கலைகலாசார பீடத்தினால் பயிர்ச்செய்கை திட்டம்!
Advanced Agri Farmers Mission
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lanka Food Crisis
By Kalaimathy
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார அசாதாரண சூழ்நிலையை போக்கும் நோக்கில் கலைகலாசார பீடத்தினால் பயிர்ச்செய்கைத் திட்டம் கலைகலாசார பீடாதிபதி பேராசிரியர் ஜீவரெத்தினம் கென்னடி தலைமையில்இடம்பெற்றது.
இந்த திட்டம் நேற்றைய தினம் (30.06.2022) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் முதல் நாற்றினை நட்டு இப்பயிர்ச்செய்கைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் கலைகலாசார பீடத்தினைச் சேர்ந்த துறைத்தலைவர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் பலாபலன்களை பல்கலைக்கழகம் சார்ந்த சமூகங்களுக்குப் பயன்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.






