இன்று ஆரம்பமாகிறது இலங்கை பொருளாதார உச்சி மாநாடு!
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டின் கீழ் இந்த ஆண்டுக்கான (2023) இலங்கைப் பொருளாதார உச்சி மாநாடு இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள பிரபல ஷங்ரில்லா விடுதியில் இடம்பெறவுள்ள இந்த மாநாடானது இன்றும் நாளையுமாக இரு தினங்களுக்கு இடம்பெறவுள்ளது.
பொருளாதார சீர்திருத்தம்
அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ள இந்த மாநாட்டில் 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதார உச்சி மாநாடானது "பொருளாதார சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சியை விரைவுபடுத்துதல்" என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த மாநாட்டில் 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்தியத் திட்டக்குழுவின் துணைத் தலைவராக இருந்த மொன்டெக் சிங் அலுவாலியா இலங்கையின் பொருளாதார மேம்பாடு குறித்து சிறப்புரை ஆற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை நோக்கம்
பல சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த உச்சி மாநாட்டில், 600 இற்கும் அதிகமானோர் பங்குபற்றவுள்ள நிலையில் பலதரப்பட்ட பொருளியல் வல்லுநர்கள் இந்த மாநாட்டில் கலந்தும் கொண்டு உரையாற்றவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக கட்டமைக்கப்பட்ட திட்டங்களை ஆராய்ந்து அதில் மேற்கொள்ளவேண்டிய திருத்தங்களை ஆர்யவதை இந்த மாநாடு இலக்காகக் கொண்டு செயற்படுவதையும் இந்த மாநாடு நோக்காகக் கொண்டுள்ளது.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும் தேவையான பகுதிகளில் திருத்தங்களை மேற்கொள்ளும் இரட்டை நோக்கங்களை இந்த மாநாடு கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் : புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதி!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening