ஹேக் செய்யப்பட்ட கல்வி அமைச்சின் இணையத்தளம்!
Ministry of Education
Sri Lanka
Hackers
Education
By Eunice Ruth
கல்வி அமைச்சின் (Education Ministry) உத்தியோகப்பூர்வ இணையத்தளம் இனந்தெரியாத நபரொருவரால் ஊடுருவப்பட்டுள்ளது(Hack).
“Anonymous EEE”எனும் பெயர் கொண்ட நபர் இந்த ஊடுருவல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
அமைச்சின் இணையத்தளத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை முன்னிலைப்படுத்தி இந்த ஊடுருவல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த நபர் இணையத்தளத்தில் செய்தியொன்றை பதிவிட்டுள்ளார்.
பாதுகாப்பு குறைபாடுகள்
அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “எனது பெயர் Anonymous EEE. நான் தற்போது உயர்தரக்கல்வி கற்று வருகிறேன்.
உங்கள் இணையதளத்தை ஊடுருவியமைக்கு மன்னிக்கவும். எனினும், உங்கள் இணையதளத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன.
இலங்கைப் பிரஜை என்ற வகையில் எனது நாட்டின் பாதுகாப்பிற்காக இதனைத் தெரிவிக்கின்றேன். அதை சரி செய்யவும். நன்றி” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்