முன்னணி ஆட்சியாளர்கள் குறித்து எழுந்த குற்றச்சாட்டு - அனுரகுமார திசாநாயக்க
இந்த நாடு ஆளப்பட்டது உணர்ச்சியற்ற தலைவர்களால் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் தொழில் வல்லுநர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார்.
நமது நாட்டினை ஒன்றிணைந்து கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்ப்போம் என தெரிவித்துள்ளார்.
உணர்ச்சியற்ற தலைவர்கள்
அனுரகுமார திஸாநாயக்க மேலும் கூறுகையில், ''நமது நாட்டை ஆள்வது யார்? மதுபான தொழிற்சாலை உரிமையாளர்கள், பாதாள குழுக்கள், கொள்ளையர்கள், குற்றவாளிகள்.
இவ்வளவு காலமும் ஈரம் இல்லாத மக்களால் இந்த நாடு ஆளப்பட்டது. உணர்ச்சியற்ற தலைவர்களால் மக்களின் பொருளாதாரம் அடிபட ஆரம்பித்துவிட்டது. நாட்டில் காணப்படும் தொழில்முறை பணியாளர்கள் 15 சதவீதம்.
அவர்களின் ஊதியத்திற்கு அதிக வரி விதிக்கப்படுகிறது.
வங்கிகளின் உயர்மட்ட மேலாளர்கள் 500 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் வரை ஐநூறு மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
கடந்த ஆண்டு இறுதிக்குள் 470 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். என தெரிவித்துள்ளனர்.
