இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை அவமதித்த மின்சாரசபை - தொடரும் வழக்கு விசாரணை
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை அவமதித்ததாகக் கூறி ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை நிராகரிக்குமாறு கோரி ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை இன்று (03) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
குறித்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இலங்கை மின்சார சபையின் சார்பில் முன்னிலையான அதிபர் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, இந்த ஆட்சேபனையை முன்வைப்பதாக தெரிவித்தார்.
இந்த மனு மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
முறைப்பாடு
காமினி அமரசேகர, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
