ஆசிய வலயத்தின் கேந்திர நிலையமாக இலங்கை - ரணிலின் புதிய திட்டம்
Trincomalee
Ranil Wickremesinghe
Sri Lanka
By Vanan
இந்து சமுத்திரத்தின் விமான மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆசிய வலயத்தின் முழுமையான விநியோக மற்றும் போக்குவரத்து மாற்றங்களை கருத்திற்கொண்டு, அதற்குரிய திட்டமிடல் அரசாங்கத்தின் 25 வருட அபிவிருத்தி திட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் அதிபர் சுட்டிக்காட்டினார்.
30 வருட அபிவிருத்தி திட்டம்
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கொழும்பு – வடக்கு துறைமுகத்தின் 30 வருட அபிவிருத்தி திட்டத்தினை வெளியிடுவதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதனை எம்மால் செய்ய முடியும் என்பதோடு எம்மால் முன்னேறிச் செல்ல முடியும் என தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி