மீண்டும் விலை குறைக்கப்பட்ட ஏழு அத்தியாவசியப் பொருட்கள்..!
இலங்கையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இன்று (09) முதல் குறைக்கப்படுவதாக சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாபா அபேவர்தன அறிவித்துள்ளார்.
இதற்கேற்ப லங்கா சதொச ஊடாக ஏழு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே பசந்த யாபா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட மக்கள்
இதன்படி இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி, சிவப்பு பருப்பு, வெள்ளை சீனி மற்றும் அரிசி மாவு ஆகியவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக ஒரு கிலோ கோதுமை மாவை 310 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், கடந்த இருவாரங்களுக்கு முன்னர் 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் லங்கா சதொசவில் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

